ஒரு காரியமும் இல்லாமல், தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டிருக்கிற பிரம்மத்தையே சிவன்,சிவம் என்று சொல்கின்றோம். காரியமில்லாமல், ரூபமில்லாமல், வருணமில்லாமல், குணமில்லாமல் இருக்கின்ற அந்த சாந்த மயமான பிரம்மத்திலிருந்துதான் இத்தனைகாரியங்கள், ரூபங்கள், வர்ணங்கள்,குணங்கள்எல்லாம் உண்டாகியிருக்கின்றன. மாயாசக்தியினால் ஒரே பிரம்மம் இத்தனை உருவங்களும் குணங்களும் உள்ள பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றியிருக்கிறது.

ஓன்றான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகக் காட்டுகின்ற அந்த மாயாசக்திதான் அம்பாள், அம்பாள் என்று சொல்லுகின்றோம். இந்தச்சக்தியால்தான் நாம் எல்லாம்தோன்றியிருக்கின்றோம். உண்மையில் நாமும் பிரம்மத்தைத் தவிர வேறு இல்லை.ஆனால், வேறாக நினைக்கின்றோம். இதற்குக்காரணம், பிரம்ம சக்தியான அம்பாளின்மாயைதான். இப்படி நம்மை மாயையில் போட்டு எடுப்பது அவளுடைய லீலை.அவள் மாயையில் நம்மைக்கட்டிப்போடுகிறவள் மட்டுமல்ல. மனமுருகி அவளை எந்நாளும்பிரார்த்தித்துக்கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்குபிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.ஞானம் பெறுவதற்கு சாஷாத் அம்பாளைத் தவிர வேறு கதி இல்லை.

அவள்தான்மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்து பல வேறான பிரபஞ்சமாக காட்டுகிறாள்.இந்த பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, சம்சாரத்திலிருந்து – ஜனனமரணச்சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும்என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அனுக்கிரகம் ஒன்றில்தான்முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாளே தான் ஞானாம்பிகையாக வந்து நமக்குமோஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.மாயா என்றால் எது இல்லையோ அது என்று அர்த்தம். இல்லாதவஸ்து எப்படிஇத்தனை ஆட்டம் ஆட்டி வைக்கிறது. ..  [மேலும் வாசிக்க]

செப்டம்பர் -08திங்கட்கிழமை.
பௌர்ணமி விரதம்.
காலை உண்ணாமுலையம்மன் ஸ்நபன அபிஷேகம்.
பௌர்ணமி விசேட பூஜை, ஸ்ரீசக்கர பூஜை.

செப்டம்பர் -09செவ்வாய்க்கிழமை.
இராகுகாலப்பூஜை.
மாலை 03-29-04:59 மணி துர்க்கையம்மன் திரவிய அபிஷேகம்.
துர்க்கா அஷ்டோத்திர பாராயணம்.

செப்டம்பர் -12வெள்ளிக்கிழமை
அபிஷேகம்.
சங்கடஹரசதுர்த்தி.
காலை காமாக்ஷி அம்பாள் ஸ்நபன அபிஷேகம்.
மாலை சௌபாக்கிய கணபதி திரவிய அபிஷேகம்.

செப்டம்பர் -13சனிக்கிழமை.
மஹாபரணி.

செப்டம்பர் -14ஞாயிற்றுக்கிழமை.
கார்த்திகை.
மாலை முத்துக்குமாரசுவாமி திரவிய அபிஷேகம்.

10.08.2014 அன்று நடைபெற்ற பௌர்ணமி தின பூஜை நிகழ்வுக்கான படங்கள்.
more

58) பஞ்சப்ரஹ்மாஸனஸ்த்திதா

1) ஐந்து ப்ரஹ்மங்களாலான ஆஸனத்தில் அமர்ந்திருப்பவள்.

2)ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன்,ஈசானன் இந்நால்வரும் நான்கு கால்களாகவும் ஸதாசிவன் மேல்பலகையாகவும் உடைய கட்டிலில் அம்பாள் காமேசுவரரோடு இருக்கிறாள். இந்த ஐந்து பிரஹ்மங்கள் ப்ரஹ்மம் உலகாக மாறுவதற்கான இச்சைப்பட்டவுடன் ஏற்படும் அதன் மாறுதல்கள் இந்த ஐவர் முறையே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸ்ஹாரம்,திரோதானம்,அனுக்ரஹம்,என்ற ஐந்து தொழில்கள் புரிபவர். இவர்கள் முறையே தென்கிழக்கு, தென்மேற்கு,வடமேற்கு, வடகிழக்குத்திசைகளில் கட்டில் கால்கள். மேலுள்ள பலகை சதாசிவன்.

3)ஐவரும் ஸதா கண்மூடி தேவியின் த்யானத்தில் பிரம்ம நிலையில் இருப்பதால் பஞ்சப்ரஹ்மமெனப்படுவர்.பரஹ்மத்திலிருந்து தோன்றியதானாலும், ப்ரஹ்மத்திலேயே ஒடுங்குவதானாலும் இவர்களும் ப்ரஹ்மம் என்றே குறிப்பிடுகின்றார்கள். சில சமயங்களில் தேவி இந்த ஐவரின் ஸ்ருஷ்டி முதலிய சக்திகளையும் அவளே தன்னுள் அடக்கிக் கொள்வாள். அப்போது இவ்வைவரும் பஞ்சப்ரேதர் எனப்படுவர்.

4)இவர்கள் கட்டில் கால்களாயிருக்கக்காரணம் அப்படியாவது அம்பாளுடைய ஸமீபத்தில் இருந்து கொண்டு அத்யந்த ஸாமீப்ய ஸேவை செய்ய வேண்டுமென்ற அவாவில்தான்.