15)அஷ்டமீசந்த்விப்ராஜதளிகஸ்
தலசோபிதா

1)அஷ்டமியில் தோன்றும் சந்திரனைப்போல் பிரகாசிக்கும்
நெற்றியுடன் சோபிக்கிறவள்.

2)பதினைந்து கலைகளுள்ள சந்த்ரன் அஷ்டமியன்று
எட்டாவது கலை நிரம்பப் பெற்றவனாகவும் (சுக்லபஷத்தில்) அல்லது
எட்டாவது கலை வரையில் குறையப்பெற்றவனாகவும் (க்ருஷ்ண
பஷத்தில் அரைவட்ட வடிவத்தில் தோற்றமளிக்கும் யாக
குண்டத்திலிருந்து மேலே வந்துகொண்டிருக்கும் தேவி வடிவில்
கூந்தல்,மலர்கள்,கிரீடம் என்று வரிசையாக மேலே வர, கிரீடத்தின்
கீழே உள்ள நெற்றி தெரிகிறது. அது சந்திரனது அஷ்டமியன்று
காணப்படும் அரைவட்ட வடிவம் கவிழ்ந்து அமைந்து மாசற்ற குளிர்ந்த
ஒளியுடன் திகழ்கிறது.

3)’லலாடம் லாவண்ய த்விதி விமலமாபாதி என்று
தொடங்கும் ஸெளந்தர்யலஹரி ஸ்லோகத்தை இங்கு ஒப்பிடலாம்.

16)முக்சந்த்ரலங்காபம்
ருகநாபிவிசேஷகா

1)சந்த்ர மண்டலத்தில் களங்கம் காணப்படுவது போல்
தேவியின் முகமாகிற சந்த்ரமண்டலத்தில் நெற்றியின்
கஸ்தூரி திலகம் களங்கம் போல் அழக்கூட்டுகிறது.

2)சந்த்ர மண்டலத்தின் நடுவே ஒரு கருமை நிறமுள்ள
பகுதியிருப்பதை சந்த்ரன் எனும் தேவனின் வாழ்க்கையில் ஏற்பட்ட
களங்கமெனக் கூறுவது இலக்கிய வழக்கு. இந்த களங்கம் மான்
போலிருப்பதால் சந்ரனுக்கு ‘ம்ருகாங்கன்’ என்றும் முயல்போலும்
காணப்படுவதால் ‘சசாங்கன்’ என்றும் பெயர்கள். தேவியின் நெற்றியை
அரைவட்ட வடிவமான சந்திரனோ என்று கூறும் போது களங்கம்
இல்லையே என்றால், அது நெற்றியில் வைக்கப்பட்ட
கஸ்தூரிப்பொட்டாக முகத்திற்கு அழகு தருவதாக அமைகிறது.

17)வதநஸ்மராமாங்கல்யக்ருஹ
தோரணசில்லிகா

1)முகமாகிற மன்மதனது வீட்டிற்கு முன் தோரணம் போன்று அமைந்த
புருவத்துடன் கூடியவள்.

2)வீட்டு வாயிலின் மேல் மழை வெயில் படாதிருக்க எடுத்துக்கட்டியிருக்கும்.அதற்குத் தோரணம் என்று பெயருண்டு. தேவியின் முகம் காமேசுவரனுடைய மனதை ஈர்க்கும் அழகு வாய்ந்தது. அதனால் மன்மதன் அம்முகத்தை தனது மங்களகரமான கார்யங்களுக்கு ஒரு அலுவலகமாக வைத்துக்கொண்டான். அம்முகத்திலுள்ள புருவங்கள் இந்த க்ருஹத்தின் முகப்பிலமைந்த தோரணம் போல் அழகாக விளங்குகின்றது.

18)வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலன்
மீனாபலோசனா

1)முகத்தின் அழகாகிய வெள்ளத்தால் ஓடும் மீன்களையொத்த
கண்களையுடையவள்.

2)முத்தின் அழகு நொடிக்கு நொடி மாறும் வண்ணமாக இருக்கிறது.
இப்படி தொடர்ந்து மாறுவதால் அது மெதுவாகச் செல்லும் வெள்ளம் போல் விளங்குகிறது.
இந்த அழகு வெள்ளத்தின் இடையே அடிக்கடி சலிக்கும் இரு கண்களும்
இங்குமங்கும் பாய்ந்தோடும் இரு மீன்களைப்போல் தோன்றுகின்றன.
இது முகத்திற்கு மேலும் அழகூட்டுவதாய் உள்ளது.

3)மீன்கள் தன் குஞ்சுகளுக்குப் பாலூட்டி வளர்பதில்லை.
முட்டையிட்டு இனவருத்தி செய்வதனால். ஆனாலும் மீன்கள் தங்கள்
குஞ்சுகளை வாத்ஸல்யத்தோடு கூடிய பார்வையினாலேயே வளர்ப்பதாக
ஒரு நம்பிக்கை. அவ்வாறே முகத்தின் அழகு வெள்ளத்தில் நீந்தும்
தேவியின் கண்கள் பக்தர்களைக் கனிவுடன் பார்ப்பதாலேயே அவர்களை
உய்விக்கின்றன. இதனால் அவளுக்கு மீனாக்ஷி என்ற பெயர். அதுவே
இங்கு ‘மீனாபலோசனா’ எனப்பட்டது.

19)நவசம்பகபுஷ்பாபநாஸா
தண்டவிராஜிதா

1)அன்றலர்ந்த சம்பகப்பூவை நிகர்த்த மூக்கினால் அதிகமான
அழகுடன் விளங்குபவள்.

2)’நவ’ என்ற பதத்திற்கு ‘புதிய’ என்றும் ‘கொஞ்சம்
மலர்ந்த’ சம்பகப்பூ என்றும் கொள்ளலாம். சற்றே மலர்ந்த சம்பகப்பூ
நல்ல வாசனையுடன் கூடியது.

20)தாராகாந்திதிரஸ்காரிநாஸா
பரணபாஸூரா

1)நஷத்ரங்களின் ஒளியை வெல்லும் மூக்குத்தியினால்
ஒளியுடன் விளங்குபவள்.

2)’தாரா’ என்ற சொல் ‘மங்களா’ ‘சுக்லா’ என்ற பெயருள்ள இரு
தேவிகளையோ அல்லது தாரகா என்று ஒரு தேவதையோ குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

3)தேவியின் மூக்குத்திகள் மாணிக்கத்தாலும் முத்தாலும் ஆனவை.

21)கதம்பமஞ்ஜரீக்லுப்தகர்ண
பூரமனோஹரா

1)கடம்ப மலர்க்கொத்தை காதுகளில் தரித்திருக்கும்
மனோஹரமான ரூபத்தை உடையவள்.

2)காது மடல்களின்மேல் பூங்கொத்தைச் செறுகிக் கொள்வது
அழகை அதிகரிக்கும். கடம்ப மலர் இதற்கேற்றது.

3)தேவி வசிக்கும் ஸ்ரீபுரத்தில் சிந்தாமணிக் கருஹத்தின் வெளியே
கடம்ப வனம் உள்ளது. அதிலிருந்து கொய்த மலர்களைத் தன்
செவிப்பூவாக அணிந்திருப்பதால் மனதைக் கவர்பவள்.

22)தாட ங்க யுக ளீபூ த த ப
னோடு ப மண்ட லா

1)சூரியன்,சந்த்ரன் இவர்களை இரு காதுகளில் தாடங்கங்களாய் தரித்துக்கொண்டிருப்பவள்.

2)ஸ்திரீகள் காதுகளில் அணியும் ஆபரணத்திற்கு தாடங்கம் (ஓலை)யென்று பெயர். சூரியனும் சந்ரனுமே காதணிகளாக மாறி தேவியின் முகத்திற்கு சோபை அளிக்கின்றனர்

3)ரவியும், மதியும் அம்பாளுக்கு இரு கண்களாகவும், தாடங்கங்களாகவும் ஸ்தனங்களாகவும் அமையும் பேறு பெற்றவர்கள்.

4)ஸூமங்கலிகளுக்கு தாடங்கம் ஒரு மிக ஸெளபாக்கியமான அணி. ஸெந்தர்ய லஹரியில், ஹாலஹால மென்றகொடிய விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன், தன் உயிருக்கு ஒரு ஹாநியும் ஏற்படாதிருப்பதற்கு உன்னுடைய தாடங்கங்களின் மகிமையினால்தான் என்று ஆசார்ய பகவத்பாதாள் ஆச்சர்யத்துடன் வர்ணித்திருக்கிறார்.

23)ப த்மராக சிலாத ர்சப ரிபா விக போ லபூ

1)பத்மராகமென்னும் சிகப்புக் கல்லினால் செய்யப்பட்ட கண்ணாடியை விட அதிசயமான கன்னங்களை உடையவள்.

2)அம்பாளுடைய கன்னங்கள் வழவழவென்றும் கண்ணாடி போல் பிரதிபிம்பம் காட்டுவதாயும் உள்ளன. அவளுடைய வடிவின் செம்மையினால் சிகப்பாயம் தோன்றுவதால் சிவப்பு ரத்தினத்திலான கண்ணாடியையும் வென்றவை போலுள்ளன கன்னங்கள்.

24)நவவித் ரும்பி ம்ப ஸ்ரீந்யக் க ரித சனச் ச தா

1)புதியதான பவழம், கோவைப்பழம் இவற்றின் காந்தியை வெல்லும் (அழகான) உதடுகளை உடையவள்.

2)தேவியின் உதடுகள் இயற்கையாக செம்மையானது. செம்மையான பொருள்களில் சிறந்தவை பவழமும், கோவைப்பழமும். இவை இரண்டையும் வெல்லும்படியான சிவப்பான அதரங்கள் அம்பாளுக்கு.

3)ரதனச்சதா என்றும் பாடமுண்டு. அர்த்தம் அதே.

25)சுத் த வித் யாங்கு ராகா ரத் விஜ ப ங்க் த் தி த்
வயோஜ் வலா

1) சுத்த வித்யையின் முளைகள் போன்ற இரு பல் வரிசைகளால் ஒளிமிக்க தோற்றமுடையவள்.

2) த்விஜ என்ற சொல்லுக்கு இரு பிறப்புடையவள் என்று பொருள். இதனால் மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன.
1.ப்ரஹ்மணன் : தாயினிடமிருந்து ஒரு பிறப்பு.
பிறகு உபநயனத்தினால் இரண்டாவது.
2.பஷி : முட்டையாய் வெளிவருவது ஒரு பிறப்பு
முட்டையிலிருந்து குஞ்சாக வெளிவருவது இரண்டாவது.
3.பல் : ஒரு தடவை முளைத்தெழுந்து விழுந்து பின் மறுபடியும் முளைப்பதால் இரு பிறப்பு.

3) வேதம் முதலியவை ப்ரஹ்மணனை ஆச்ரயித்து இருக்கின்றன. ப்ராஹ்மணன் வேதங்களைக் கற்றுணர்ந்து அவற்றை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதால் ப்ராஹ்மணர்கள் ‘வித்யாங்குரான்’ வித்யைக்கு முளை போன்றவர்கள். அதாவது வித்யைக்கு முளையானப் ப்ரஹ்மணர்களின் இரு வரிசை போல், அம்பாளின் பல்வரிசை சோபிக்கிது.

26)க ர்ப் பூ ரவீடி கா மோத ஸமாக ர்ஷிதி க்த ரா

1) (தன் முக கமலத்திலுள்ள) கர்ப்பூர வீடிகா என்கிற தாம்பூலத்தின் நறுமணத்தால் தன் வசம் இழுக்கப்பட்ட திக்குகளை உடையவள். அல்லது (தன்முக கமலத்திலுள்ள) கர்பூர வீடிகா என்கிற தாம்பூலத்தின் நறுமணத்தைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் திக்குகளுடன் கூடியவள். வீடிகா என்பது பச்சைக்கற்பூரம், ஏலம்,கிராம்பு, கஸ்தூரி, குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, பாக்கு, வால் மிளகு, சுக்கு, சுண்ணாம்பு, கத்தக்காம்பு, இவைகளைத் தக்க அளவில் வெற்றிலையில் வைத்து மடிக்கப்பட்ட சிறு பீடா. இதைத் தேவி சுவைப்பதால் அதிலிருந்து வெளிவரும் நறுமணம் திக்கெல்லாம் பரவுகிறது. இதையே ஒரு உருவமாக ஒவ்வொரு திக்கும், திக்கின் இடைவெளியும் இந்நன்மணத்தைச் சுவைக்க அம்பாளைச் சூழ்ந்து கொண்டு போட்டி போடுவதாக கூறப்பட்டிருக்கிறது. திக்கெனப்படுவது கிழக்கு முதலிய நான்கு. திகந்தரம் அல்லது திக்கின் இடைவெளி என்பது, தென்கிழக்கு,தென் மேற்கு முதலிய நான்கு. இவைகளை நறுமணத்தைச் சுவைக்க முயற்சி செய்வதாகவும் அல்லது நறுமணம் இவ்வெண்திக்குகளையும் தன் வசம் இழுத்துக்கொண்டதாகவும் இரு வகையாகக் கூறப்பட்டது.

2)தேவியின் தாம்பூல ரஸத்தின் மூலம் காளிதாஸன், மூகன் முதலிய உபாஸகர்கள் உத்க்ருஷ்டமான கவித்வ சக்தியை அடைந்ததாக கூறப்படுகிறது.

3) தேவியைச் சுற்றி திக்பாலகர்கள் நின்று வழிபடுகின்றனர் என்று கூறாமல் கூறப்பட்டுள்ளது.

27)நிஜ ஸல்லாப மாது ர்ய விநிர்ப ர்த் ஸித க ச் ச பீ

1) தன்னுடைய பேச்சின் இனிமையினால் கச்சபீ எனப்படும் ஸரஸ்வதி தேவியின் வீணையையும் வென்றவள்.

2)கச்சபீ என்பது ஸரஸ்வதியின் வீணையின் பெயர். வீணையில் ஸாஹித்யங்களின் ஒலி கேட்காது. ஸ்வர ஒலி மட்டும்தான் கேட்கும். ஆனால் ஸரஸ்வதீ நாதரூபிணி, சப்தரூபிணீ என்பதால் அவள் வீணையின் அஷர ஒலியும் ஸ்வர நாதத்துடன் சேர்ந்து ஒலிக்கும். ஆனாலும் அவ்வஷர ஒலி கிளி, சிசு இவர்களது மழலை போலவே ஸ்பஷடமாகப் புரியாது. இப்படிப்பட்ட ஸரஸ்வதீ தேவியின் வீணை ஒலியையும் தேவியின் பேச்சின் இனிமை வென்றுவிடுகிறது.

3)இந்த வாக்கினிமையை விளக்குவதாக ஸெந்தர்ய லஹரியில் ஒரு ஸ்லோகம் உள்ளது. ‘விப ஞ்ச் யா கா யந்தீ’ என்று துடங்கும் 66வது செய்யுள். ஸரஸ்வதீ தேவி வீணை வாசிக்கும் போது அதன் இனிமையை ரசித்த தேவீ ‘ஸபாஷ்’ என்று வாய்விட்டுக் கூறிப் பாராட்ட இந்த வாக்கின் இனிமையினால் வெட்கிய ஸரஸ்வதீ தன் வீணையை உறையிலிட்டு மூடினாள் என்று கூறப்படுகிறது.

28)மந்த ஸ்மித ப் ரபா பூ ரமஜ் ஜ த் கா மேசமானஸா

1) தனது புன் சிரிப்பின் ப்ரவாஹத்தில் காமேசுவரருடைய மனதை முழுகச் செய்தவள்.

2) ஸ்மித என்றால் புன்சிரிப்பு – அதாவது பற்கள் வெளித்தெரியாமல் மெல்லச்சிரிப்பு என்ற பொருள். அதிலும் ‘மந்தஸ்மித’ என்றால் இன்னும் விசேஷமாக மென்மையானது.

3) ‘மஜ்ஜத்’ என்ற சொல்லிற்கு முழுகிக் கொண்டிருக்கும் என்று பொருள். காமேசுவரருக்கு தேவியின் புன்னகையின் ஒளியில் முழுகும் போது, அதை விட்டு வெளியே வரவேண்டாமே என்ற எண்ணமும் எழுகிறது. முழுகுவதிலேயே ஒரு ஆனந்தம் எனவே முழ்கிப்போய்விடுவோம். என்ற ஓர் ஆவல். புன்னகையில் மூழ்கிவிட்டால் இதர அவயங்களின் ஸெந்தர்யத்தை அனுபவிக்க என்ன செய்வது என்றும் ஓர் ஆசை. எனவே மூழ்கிக்கொண்டிருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

4) காமகலையி;ல் ‘காம’ என்றால் பிந்து. கலா என்றால் ஸோமசூரியாக்னி. பிந்து அஹங்காரத்தைக் குறிப்பது. காம, கலா இரண்டும் காம கலையைக்குறிப்பது. காமேச்வர என்ற பதத்திற்கு ‘ராஜராஜேச்வர’ என்று அர்த்தம் காமகலாரூபமானவர் என்பது.

5) சிதக்னிகுண்டத்திலிருந்து தோன்றிய தேவிக்கு ஸாம்ராஜ்ய பட்டம் சூட்டுமுன் அவளுக்கு மணாளனாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு கேள்வி. தேவியை மணக்கும் தகுதி பரமேசுவரனுக்கே. ஆனால் அவரோ இவளுடைய அழகு வடிவிற்குச் சற்றும் பொருந்தாத சடையாண்டியாக, யானைத்தோல் போர்த்தியவனாகவோ, திகம்பரனாகவோ, நாகாபரணனாக, சாம்பல் பூசியவனாக இருப்பதைக்கண்டு தேவர்கள் திகைக்கின்றனர். உடனே காமேசுவரன் மிக அழகனாக ஆனார். தேவி தன் கையிலுள்ள மாலையைச்சுழற்றி ‘இந்த மாலை யார் கழுத்தில் விழுகிறதோ அவரே என் மணாளன்’ என்று கூறி வீச அது காமேச்சுவரர் கழுத்திலே விழுகிறது. இதனால் தேவி புன்னகைக்க அந்த அழகிலேயே அவர் மூழ்குகிறார்.இந்த வ்ருத்தாந்தம் லலிதோபாக்யானதில் உள்ளது.

30)கா மேசப த்த மாங்க ல்யஸூத்ர சோ பி த க ந்தரா

1) விவாக காலத்தில் காமேச்வரரால் கட்டப்பட்ட ஸெளபாக்யாபரணமான மங்கல ஸூத்ரத்தினால் ஆழகு ததும்பும் கழுத்தை உடையவள்.

2) தேவி நித்ய ஸூமங்கலி. எப்போதும் திருமாங்கல்யத்துடன் விளங்குபவள். சிதக்னி குண்டத்திலிருந்து தோன்றும் போதும் மங்கல நாணுடன் தோன்றினாலும் மறுபடியும் இந்த ஆதி தம்பதியருக்குத் திருமணம் செய்வித்து காமேசுவரரால் ஸெளபாக்கியா பரணத்தை தேவிக்கு அணிவித்து அழகு பார்க்கின்றனர்.

3) காமனை எரித்து அதனால் காமாரி என்று பெயர் வாங்கிய பரமேசுவரன் தேவியைக்கண்டவுடன் தனக்குக் காமம் ஏற்பட வேண்டுமென்ற ஆசையினால் காமனைப் பிழைக்க வைத்துத் தானே அவனுடைய பாணங்களுக்கு இலக்காக்கிக் கொண்டார் போலும் அதுவும் தேவியின் மூலமாகவே. இதனாலே இவர் காமனுக்கு ஈசனாக ஆனார்.

4) தேவியைத் திருமணம் புரியும் ஆசையில் ஈசுவரன் மன்மதனின் நண்பனாகி அவனால் ‘நீங்கள் எனக்கு ஈசன்’ என்று வணங்கப்பட்டதனால் காமேச்வரன்.

5) காமேசனால் கழுத்தில் கட்டப்பெற்ற இந்த மங்கள ஸூத்ரம் உலகிற்கே மங்களத்தை வழங்குவது. இந்தப்பலனை முதலில் அடைந்தது மன்மதன் ரதி தம்பதியளர்தான். அதுவும் காமேச்வரர் தம்பதிகள் மூலம் உலகம் உய்வதற்காகத்தான்.

31)க நகா ங்க த கே யூரக மநீயபு ஜான்விதா

1) தங்கத்தினாலான தோள் வளைகளால் அழகு நிறைந்த புஜங்களோடு கூடியவள்.

2) கைகளில் அங்கதம், கேயூரம் என்னும் அணிகள் அணியப்படுவன. கேயூரம் அழகிற்காக அணியப்படுபவை. அங்கதம் போர்புரியும் வீரர்கள் தோள்களையும் புஜங்களையும் பாதுகாக்க அணிவது. தேவி அரசி ஆதலால் இருவகை நகைகளையம் அணிந்து புஜங்களின் அழகுடன் விளங்குகிறாள்.

32) ரத் னக் ரைவேயசி ந்தா க லோலமுக் தா ப லான்விதா

1) ரத்னத்தால் அமைந்த அட்டிகை பதக்கம் அவைகளிலிருந்துதொங்கும் முத்துமாலைகளோடும் கூடியவள்.

2) க்ரீவா என்றால் கழுத்து. க்ரைவேய கழுத்தில் அணிந்திருக்கும் அட்டிகையின் பதக்கம். அதனை ஒட்டித்தொங்கும் முத்துச்சரங்கள்.

3) கழுத்தை ஒட்டிய அட்டிகை, அதன் நடுவே பதக்கம் அவற்றின் கீழ் தொங்கும் முத்துச்சரங்கள். இம்மூன்றும் மூன்று வகையான பக்தர்களைக் காட்டுவது போல் உள்ளன. சிலருடைய வாய் தேவியை ஸ்துதித்துக் கொண்டிருக்கும் ஆனால் மனம் எங்கோ சென்றிருக்கும். அவர்களது நினைவில் தேவி கழுத்தளவே நிற்கிறாள். இவர்கள் க்ரைவேய சிந்தாகர்கள். கழுத்திற்கு மேல் தேவியைப்பற்றிய நினைப்போடிருப்பவர்கள். அட்டிகையில் தொங்கி ஆடிக்கொண்டிருக்கும் லோலர்கள். அவர்களுடைய மனமும் செயலும் வழிபாட்டில் சிறிது நேரமும் வேறெங்கோ சிறிது நேரமும் ஆடிக்கொண்டிருக்கும்.மூன்றாவது வகையோ முக்தா-விடுபட்டவர்கள். வெளிச்சிந்தனைகளும்,அதன் விளைவான செயல்பாடுகளும் நீங்கி மனத்தாலும் செயலாலும் வாக்காலும் தேவியிடம் ஈடுபட்டவர்கள். இவ்வாறு பக்தர்களை மூவகைப்படுத்துகிறது இந்த நாமம்.

4) இவ்வாறே இம்மூவகையினருக்கும் கிட்டும் பலனும் வௌ;வோனது. க்ரைவேய சிந்தாகனுக்கும் லோலனுக்கும் ‘ஆ-பல′ சிறிதளவு பலன் முக்தனுக்கோ ‘ஆ-பலன்’ முழுப்பலன்’ஆ-பல′ என்பதற்கு சிறிது, முழுது என்ற இருவகை அர்த்தங்களை முறையே காட்டுகின்றன.அதாவது மனம் பதியாமல் நாவளவில் நாமங்களைக்கூறி வழிபடுபவர்களுக்கு சிறிதளவில் பலன் அதிலும் நிலைத்pராமல் சஞ்சலப்படும் லோலர்களுக்கு அதிலும் குறைந்த பலன். மனம்,வாக்கு,செயல் மூன்றும் ஒன்றுபட்டு வழிபடுவோருக்கு முழுப்பலன். ஆக மூவகைப்பக்தர்களுக்கும் ரத்னம் போன்ற பலனை தகுதிக்கேபக் கொடுப்பவள்.

33) கா மேச்வரப் ரேமரத் னமணிப் ரதி ப ணஸ்த னீ

1) காமேச்வரருடைய அன்பெனும் சிறந்த ரத்ன மணிக்கு பதிலாக அல்லது விலையாகக் கொடுக்கிற ஸ்தனங்களை உடையவள்.

2) தேவி காமேச்வரருக்குத் தன்னிடம் இருக்கும் விலைமதிப்பிலா அன்பைத் தன் ஸ்தனமாகிற ரத்னங்களால் வாங்கியிருப்பவள்.

3) தான் வாங்கும் ப்ரேமையான ஒரு ரத்னத்திற்கு தன் ஸ்தனங்களாகிற இரு வஸ்த்துக்களை விலையாக அல்லது விலைபோலக்கொடுத்திருப்பது பதிலுக்குப்பதில் மட்டுமல்லாமல் இரட்டிப்பாக கொடுத்திருப்பதாக அதிசயோக்தியாகக் கூறப்பட்டுள்ளது.

35) லஷ்யரோமலதா தா ரதா
ஸமுந்நேயமத் யமா

1) ரோமவரிசையாகிற கொடிக்கு ஆதாரமாயிருப்பதை (நேரிடையாகக் காண முடியாததினால்) ஊஹிக்க வேண்டியிருக்கிறதான இடையை உடையவள்.

2) முந்நாமத்தில் குறிக்கப்பட்ட ரோம லதை தெரிகிறது. அது தோன்pய இடம், வேர் பதிந்துள்ள இடம் இன்னதென்று அறிய முடியவில்லை. இடை என்றோர் அவயவம் இருக்க வேண்டுமே. அதுவும் புலப்படவில்லை. இடை இங்குதான் இருக்க வேண்டும். இந்த ரோம வரிசையின் வேர்ப்பகுதியும் இங்குதான் இருக்க வேண்டும் என்று ஊகத்தினால் அறியப்பட வேண்டியதாயிருக்கிறது தேவியின் இடை.

3) உத்தம ஜாதிஸ்திரீகளுக்கு இடை மிகவும் சிறியதாக அதாவது இருக்கிறதோ இல்லையோ சந்தேகிக்கும் அளவுக்கு இருக்கும் என்பது ஸாமுத்ரிகாசாஸ்திர இலக்கணம்.

36) ஸ்த னபா ரதலன்மத் யபட்ட பந்த வளித் ரயா

1) ஸ்தனங்களின் சுமையினால் முறிந்து போய்விடுமோ என்று தோன்றக்கூடிய இடுப்புக்குப் பட்டை கட்டியது போன்று அமைந்துள்ள மூன்று மடிப்புக்களை உடையவள்.

2) உத்தம ஜாதிஸ்திரீ புருஷர்களுக்கு நெற்றியிலும் கழுத்திலும் வயிற்றிலும் மூன்று கோடுகள் போன்ற மடிப்புக்கள் இருக்குமென்லு ஸாமுத்ரிகா சாஸ்த்ரம் கூறும் லஷணம் அவை மகத்தான ஸெளபாக்கியத்திற்கு அடையாளம்.

37) அருணாருண கௌ ஸூம்ப வஸ்த் ரபா ஸ்வத் க டீதடீ

1) மிகவும் சிவந்த பட்டாடையால் ப்ரகாசிக்கும் இடையை உடையவள்.

2)அருண-அருண என்ற இரட்டைச் சொல் மிகவும் சிவந்த என்ற பொருள் உள்ளது.

3)சூரியோதயத்திற்கு முன்தோன்றும் அவனுடைய தேரோட்டியான அருணணைப்போல் சிவந்தது.

4)கௌஸூம்ப வஸ்த்ர என்றால் சிவந்த பட்டாடை பட்டிற்கு சிவப்பு நிறமேற்ற குசும்பாச்செடியின் சாற்றைச் சேர்ப்பர். எனவே கௌஸூம்ப வஸ்த்ரம்.

5)தேவீ தனது இடுப்பில் கௌஸூம்ப வஸ்த்ரத்தை உடுத்தியிருக்கிறாள்.

6)அருணா வாக்தேவியின் பெயர் மறைமுகமாகக் கூறப்பட்டதாகத் தோன்றுகிறது.

38) ரத் நகி ங்கி ணிகா ரம்ய ரசநாதா மபூ ஷிதா

1) ரத்னங்களாலான சலங்கைகளால் அழகான அரை ஞாணை (மேகலா ஸூத்ரம்) அணிந்தவள்.

2)தங்கத்தாலான அரைஞாணில் சலங்கைகள் தொங்குகின்றன. அவைகளில் ரத்னங்கள் பரல்களாகிக் கிண் கிண் என்று மெல்லியதாக ஒலிக்கின்றன.

43) கூர்மப் ருஷ்ட் டஜயிஷ்ணுப் ரப தா ன்விதா

1) ஆமையின் முதுகை வெல்லும் புறங்கால்களை உடையவள்.

2) உத்தம ஜாதிப் பெண்களின் புறங்கால்கள் உயர்ந்து குவிந்து விளங்கும். எனவே வேறு உவமை இல்லாததால் ஆமையின் முதுகைப் போன்று குவிந்தவை என்று கூறப்பட்டன. இது மதிப்பில் தாழ்ந்த உவமையானாலும் இதனால் குpப்பிடப்படுவது ‘குவிந்திருத்தல்’ என்ற ஒரு அமைப்பு மட்டும்தான்.

45) பதத் வயப ரபாஜாலப ராக் ருதஸரோருஹா

1) தன் இரு பாதங்களையுடைய காந்தியினால் தாமரைப் பூவை வென்றவள்.

2) பொதுவாக ஸூந்தரமான ஸ்திரீபுருஷர்களின் அவயங்களில் முகம், பாதம்,கண்கள் இவற்றிற்குத் தாமரையை உவமையாகக்கொள்வது இலக்கிய மரபு,ஒளி, மென்மை, அழகிய அமைப்பு, இனிமையான தோற்றம் இவை தாமரையின் சிறப்புக்ள். தேவியின் திருவடிகளில் இவைகளுடன் இன்னொரு விசேஷமான அம்சமும் கூடியிருக்கிறது. தாமரை அன்றலர்ந்து அன்றே வாடும். தேவியின் பாதகமலகளோ நித்யமாக எப்போதும் ஒளிவீசிக் கொண்டிருப்பதால் தாமரையையும் வென்றதாக ஆகிறது.

46) ஸிஞ்ஜான மணிமஞ்ஜீ ர மண்டி த ஸ்ரீப தாம்பு ஜா

1) சப்திக்கின்ற மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட திருவடித் தாமரைகளையுடையவள்.

2) திருவடிகளில் அணிந்திருக்கும் சிலம்புகள் ரத்னப்பரல்களுள்ளவை. எனவே மென்மையான, இனிமையான ஒலியை அவைகள் ஆடும் போது எழுப்புகின்றன. இந்த சிலம்பொலியோடு கூடிய தேவியின் சரண கமலங்களுக்கு ஸ்ரீயைச் சேர்க்கின்றன. (ஸ்ரீ என்ற சொல் பிறமொழிகளில் முழுமையாக மொழிபெயர்க்க முடியாதது). அது ‘நல்லன எல்லாம்’ என்று கொள்ளலாம்.

3) ‘சிஞ்ஜான’என்னும் பதப்ரயோகம் உண்டு. பொருள் ஒன்றே.

48) மஹாலாவண்யசேவதி

1) அழகுக்கெல்லாம் ஒரு களஞ்சியம் அல்லது பெட்டகமாயிருப்பவள்.

2) அம்பாளின் பேரழகிற்கு ஈடு இணை கிடையாது. எல்லா அழகுகளும் ஒன்றே சேர்ந்து திரண்டு அமைந்த வடிவம் அழகிற்கெல்லாம் ஒரு பெட்டகம் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

50) அநவத்யாங்கீ

1) குறைவொன்றுமில்லாத அங்க அமைப்பை உள்ளவள்.

2) சரீரத்தில் பாதாதி கேசாந்தமாகவும், கேசாதி பாதமாகவும் எந்த ஒரு குறையும் இல்லாத அங்க அமைப்பு காண்போருக்கு ஆநந்தத்தை அள்ளி வழங்குகிறது.

51) ஸர்வாபரணபூஷிதா

1) எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பெற்றவள்.

2) தேவியணியும் பல ஆபரணங்கள் சூடாமணி முதல் பாதாங்குலீயகம் வரை கல்பஸூத்ரம், காளிகா புராணம் முதலியவைகளில் கூறப்பட்டுள்ளன. முந்நாமாவில் கூறியது போல் குறைவற்ற அழகான அங்க அமைப்பை உள்ள தேவிக்கு எல்லா ஆபரணங்களும் மேலும் அழகூட்ட முயற்சி செய்கின்றன. ஆனால் அவற்றால் முடியவில்லை. எனவே அவளால் அணியப்பெற்றதால் ஆபரணங்களுக்கு அழகு பெருகிற்று.

3) ஸர்வ ஆபரணங்களாலும் பூஷிதா அலங்கரிக்கப்பட்டவள். இன்னொரு வகையில் ஆபரணங்கள், பூஷிதா எவளால் அலங்காரப்பொருளாகும். தன்மையை அடைகின்றவனோ அவள் தேவி என்றும் பொருள் கொள்ளலாம்.

4) இவ்வாறு இதுவரை அம்பாளின் ஸ்தூல ரூபத்தை கேசாதி பாதாந்தமாக வர்ணித்துவிட்டு இனி அம்பாளின் இருப்பிடம் வர்ணிக்கப்படுகிறது.